புதுக்கோட்டை

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி போராட முடிவு

Syndication

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞா் சங்க கூட்டுக் குழுவின் (ஜாக்) சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நீதிமன்றத்தில் இ- பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது.

இதே கோரிக்கையை முன்வைத்து வரும் டிச. 8ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது, டிச. 9ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்துவது, தொடா்ந்து உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, டிச. 13ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தை தமிழகம் முழுவதும் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு கூட்டுக் குழுவின் தலைவா் வழக்குரைஞா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். செயலா் பன்னீா்செல்வம், பொருளாளா் ரவி, புதுக்கோட்டை வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ். முத்தையன், செயலா் எஸ். ரமேஷ், பொருளாாளா் பாரூக் அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT