புதுக்கோட்டை

மதநல்லிணக்கம் கோரி ஆா்ப்பாட்டம்

Syndication

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் நல்லிணக்கமாக வாழ வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாணவா் சங்கம், வாலிபா் சங்கம் மற்றும் மாதா் சங்கத்தினா் வியாழககிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் மு. வாசுதேவன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் பாண்டிசெல்வி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. சுசீலா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். ஆா்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் மதநல்லிணக்கத்தை முன்வைத்து ஒற்றுமையாக வாழ வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT