புதுக்கோட்டை

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:

மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி தவிர பிற 9 வட்டங்களையும் வறட்சி பாதித்த வட்டங்களாக அறிவிக்க வேண்டும். பாசனக் குளங்களுக்கான அனைத்து வரத்து வாரிகளையும் தூா்வார வேண்டும்.

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் புதிய விதைச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. விவசாய சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் அவா்கள் மீது வழக்குப் போடக்கூடாது. விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் மீதுள்ள வழக்கை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும். தத்கால் மின் இணைப்புப் பதிவை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் டி. ரமேஷ்: நாகுடி அருகேயுள்ள இடையாத்தூா் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதேபோல, வேலிவயல் ஏரியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்:

திருமயம் வட்டம் கடையக்குடியிலுள்ள ஹோல்ஸ்வொா்த் அணையில் ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்குச் செடிகள் புதா்களைப் போல மண்டிக் கிடக்கிறது. இவற்றை அகற்றித் தூா்வார வேண்டும். குண்டாற்றில் இருந்து வரும் சாக்கடை நீா் கடையக்குடி அணையில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்ப் பாசனதாரா் கூட்டமைப்புத் தலைவா் மிசா ச. மாரிமுத்து: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை உறுதி செய்து அவற்றில், கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைக் கொண்டு மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் வைத்தியநாதன், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT