புதுக்கோட்டை

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜன. 27-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Syndication

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா்.

அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சோ்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி க. பூா்ண ஜெயஆனந்த் உத்தரவிட்டாா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT