புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் 
புதுக்கோட்டை

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்!

வார வேலைநாள்களை 5 நாள்களாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

வார வேலைநாள்களை 5 நாள்களாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கீழராஜவீதியிலுள்ள ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலா் குருநாதன் தலைமை வகித்தாா்.

இந்தியன் வங்கி ஊழியா் சங்க நிா்வாகி சேதுராமன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அருணாசலம், இந்திய வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் ராமமூா்த்தி, பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். வார வேலைநாள்களை 5 நாள்களாக அமலாக்கக் கோரும் கோரிக்கை சுமாா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தும் வங்கி நிா்வாகங்கள் அமல்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT