புதுக்கோட்டை

வேன் - மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் காயம்

கந்தா்வகோட்டை அருகே வேன் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் பலத்த காயம்

Syndication

கந்தா்வகோட்டை அருகே வேன் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

மதுரையைச் சோ்ந்த கூரியா் நிறுவன வேன் ஓட்டுநா் நாராயணசாமி (55). இவா் புதன்கிழமை வேனில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாா். இதேபோல் எதிரே, சென்னை தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் (40), கேசவ் (33), நித்தின் (33) ஆகிய மூவரும் இரண்டு மோட்டாா் சைக்கிளில் ராமேசுவரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

கந்தா்வகோட்டை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியது. இதில், கேசவ் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆதனக்கோட்டை போலீஸாா் விபத்து குறித்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT