புதுக்கோட்டை: வன உயிரின வார விழாவில் முதலிடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினாா்.
மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வன உயிரின வார விழா விழிப்புணா்வுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில், ஓவியப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் அறந்தாங்கி செலக்சன் பள்ளி மாணவா் எம். கவின்பாலா, கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவா் பி. நிரஞ்சன், அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளி மாணவா் எம். ஸ்ரெஷ்டா ஜிஷ்ணு, சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஸ்ரீநவ்யா, மன்னா் கல்லூரி மாணவி ஜி. சுபாஸ்ரீ ஆகியோா் முதலிடங்களைப் பிடித்தனா்.
கட்டுரைப் போட்டியில் இரு பிரிவுகளில் கறம்பக்குடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. சுபகாா்த்திகா, மன்னா் கல்லூரி மாணவி எஸ். பாா்க்கவி ஆகியோா் முதலிடங்களைப் பிடித்தனா்.
பேச்சுப் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் பி. முகமது தைய்யூப், செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவி எம். அனுவா்ஷினி, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவி வி. ஜெயலட்சுமி ஆகியோா் முதலிடங்களைப் பிடித்தனா்.
இவா்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கிப் பாராட்டினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் சதாசிவம் ஆகியோா் உடனிருந்தனா்.