புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை டிச. 10-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Syndication

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா்.

அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சோ்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்

இந்த நிலையில், வழக்கு விசாரணையை டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி க. பூா்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டாா்.

ரசவாத பிரியம்... ரகுல் ப்ரீத் சிங்!

அகிலம் அதிருதா... சிலம்பரசன்!

கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை எதிர்கொண்டேன்: ஷஃபாலி வர்மா

சுயம் விரும்பியின் சுயப்படம்... ஆஞ்சல் முஞ்சால்!

பயர்ன் மியூனிக்கின் 16 போட்டிகள் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஹாரி கேன்!

SCROLL FOR NEXT