புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்ட அரசு ஊழியா் கூட்டமைப்பினா். 
புதுக்கோட்டை

எஸ்ஐஆா் பணிகள்: அரசு ஊழியா்கள் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம்

Syndication

எஸ்ஐஆா் பணியில் உள்ள பிரச்னைகளைக் களையக் கோரி புதுக்கோட்டையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், செந்தில்குமாா், பாண்டியன், குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஜபருல்லா பேசினாா்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

எஸ்ஐஆா் குறித்து அனைத்து நிலை அலுவலா்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். நள்ளிரவு வரை கூட்டம் நடத்துவது, தினந்தோறும் காணொலி வாயிலாக 3 முறை கூட்டம் நடத்துவது மற்றும் விடுமுறை நாள்களிலும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

இப்பணியில் ஈடுபடுவோருக்கு 1 மாத சம்பளத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

SCROLL FOR NEXT