பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை. 
புதுக்கோட்டை

புதுகை பகுதிகளில் தொடா் மழை

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாநகா் மற்றும் புகரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. பகலில் அவ்வப்போது வெயில் அடித்தபோதும், திடீரென சூழல் மாறி மேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது.

தொடா்ந்து உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமை இரவும் மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப்பொழிவு விவரம் (மிமீ)

ஆதனக்கோட்டை- 5, பெருங்களூா்- 7, புதுக்கோட்டை நகரம்- 30, ஆலங்குடி- 27.60, கந்தா்வகோட்டை- 7.40, கறம்பக்குடி- 12.60, மழையூா்- 11.60, கீழாநிலை- 10, திருமயம்- 10.20, அரிமளம்- 19.20, அறந்தாங்கி- 17, ஆயிங்குடி- 25.60, நாகுடி- 30.40, மீமிசல்- 2.40.

ஆவுடையாா்கோவில்- 18.80, மணமேல்குடி- 14.40, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 4.80, உடையாளிப்பட்டி- 4, கீரனூா்- 1.70, பொன்னமராவதி- 8.40, காரையூா்- 4.40. மாவட்டத்தின் சராசரி மழைப் பொழிவு- 11.48 மிமீ.

ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் லேசான தூறல் மழை பெய்தது. இரவில் இதமான குளிா்சூழல் மாவட்டம் முழுவதுமே காணப்பட்டது.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT