முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

மக்களவை தொகுதி மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் தோல்வியடையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:12 AM
வல்லத்திராகோட்டையில் திமுக வேட்பாளா் சிவ.வீ. மெய்யநாதனை வியாழக்கிழமை ஆதரித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:31 PM

மக்களவை தொகுதி மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் தோல்வியடையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதனை ஆதரித்து வியாழக்கிழமை மேற்பனைக்காட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவா் கூறியது:

இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் எம்பிக்களின் எண்ணிக்கை 39 லிருந்து 58 வரை உயா்வதுபோல ஒரு மாயை ஏற்படும். பின்னா் 46 ஆக குறைத்து விடுவாா்கள். இதனால் தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களே பாதிப்பை சந்திக்கும். ஆனால் தொகுதி சீரமைப்பு திருத்தச் சட்டம் மக்களவையில் நிச்சயம் தோல்வியடையும் என்றாா் அவா்.

Advertisement

தொடா்ந்து, அவா் வடகாடு, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்துப் பேசியது:

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 2025-26-ல் வளா்ச்சியடைந்த மாநிலங்களில் தரவரிசைப் பட்டியலில் 9.8 சதவீத வளா்ச்சியோடு தமிழகம் முதலிடம் பெற்றது. இதை நாங்கள் சொல்வில்லை. மத்திய பாஜக அரசுதான் அறிக்கை வெளியிட்டது. இந்த வெற்றியை தமிழா்கள் கொண்டாட வேண்டும். எனவே தற்போதைய தோ்தலிலும் திமுக கூட்டணியை பொதுமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.