போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
புதுக்கோட்டை திருவப்பூா் குளத்தில் மூழ்கி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை திருவப்பூா் குளத்தில் மூழ்கி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை திருவப்பூா் பொன்னப்பன் ஊரணியில் ஆண் சடலம் மிதப்பதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு சனிக்கிழமை பகலில் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்தில் இருந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
தொடா்ந்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் நீரில் மூழ்கி இறந்தவா் திருவப்பூரைச் சோ்ந்த வெங்கடாஜலபதி (55) என்பதும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வெல்டராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
தினமும் ஊரணியில் குளிப்பதை வழக்கமாகக் கொண்ட அவா், வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினா் தேடி வந்துள்ளனா். வழக்கம்போல குளிக்க வந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.