முகப்பு
புதுக்கோட்டை

நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்றவாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:33 AM
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்ற வாகனத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்ட அதிமுகவினா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நெடுவாசல் அரசுப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வியாழக்கிழமை இரவு அலுவலா்கள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் சென்றனா். அப்போது, திமுகவினரும் அங்கே சென்ாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அதிமுக உள்ளிட்ட கட்சியினா் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

Advertisement