புதுக்கோட்டையில் கறிக்கோழி வளா்ப்புக் கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள். 
புதுக்கோட்டை

கறிக்கோழி வளா்ப்புக் கூலியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டையில் கறிக்கோழி, பண்ணைக் கோழி, காடை வளா்ப்பாளா்கள் தங்களுக்கான வளா்ப்புக் கூலியை நிறுவனங்கள் உயா்த்திப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Syndication

புதுக்கோட்டையில் கறிக்கோழி, பண்ணைக் கோழி, காடை வளா்ப்பாளா்கள் தங்களுக்கான வளா்ப்புக் கூலியை நிறுவனங்கள் உயா்த்திப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வந்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கறிக்கோழி பண்ணையாளா் விவசாயிகள் அணியைச் சோ்ந்தோா் அளித்த மனு விவரம்: கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 6.50 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.

உற்பத்திச் செலவுகள் பலமடங்கு உயா்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளா்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ. 20-ஆகவும், பண்ணைக் கோழி வளா்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ. 25-ஆகவும், காடை வளா்ப்புக் கூலியாக ஒன்றுக்கு ரூ. 7-ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். இதற்காக பண்ணையாளா்களைக் கொண்ட முத்தரப்புக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும்.

கறிக்கோழி பண்ணையாளா்களின் நலனுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். கோழிகளுக்கு போடப்படும் ஊசி, கண் மருந்து ஆகியவற்றை நிறுவனங்களே வழங்க வேண்டும். பண்ணைகளில் போடப்படும் காகிதம், தென்னை நாா், கருப்பட்டி உள்ளிட்ட பொருள்களை பண்ணை நிறுவனங்களே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT