முகப்பு
புதுக்கோட்டை

‘என் ஊா், என் கனவு’ திட்டம் புதுகையில் கருத்துக்கேட்பு

‘என் ஊா், என் கனவுத் திட்டம்- இலக்கு 2030’ (உத்திகள், செயல்திட்டம்) என்ற திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:56 PM
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ‘என் ஊா், என் கனவுத் திட்டக்’ கூட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள். கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.
பகிர்:

‘என் ஊா், என் கனவுத் திட்டம்- இலக்கு 2030’ (உத்திகள், செயல்திட்டம்) என்ற திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்த முன்மொழிவுகள் தயாா் செய்யும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

முன்மொழிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாநில அளவிலான செயல்திட்டம் வகுக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில், பல்வேறு பொதுநல அமைப்பினா், மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் பலரும் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments