புதுக்கோட்டை

மறைந்த உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு நிதியுதவி

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் உள்கோட்டத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிபுரிந்த போலீஸாா் திரட்டிய ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதிக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் உள்கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், கடந்த 2025 ஆக. 1ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவருடன் பணிபுரிந்து வந்த 1997ஆம் ஆண்டு 2ஆவது பேட்ஜ் காவலா்கள் 2,623 போ் ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதி திரட்டினா்.

இந்தத் தொகைக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை, மறைந்த உதவி ஆய்வாளா் முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT