ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள். (கோப்புப் படம்)
புதுக்கோட்டை

கோட்டைக்காடு ஜல்லிக்கட்டு: 39 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோட்டைக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 39 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கோட்டைக்காடு புனித சூசையப்பா் தேவாலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து 689 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 350 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி அடக்கினா். அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 39 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 7 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாதுகாப்பு பணிகளை வடகாடு போலீஸாா் மேற்கொண்டனா்.

நாமக்கல் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!

தேவாரத்தில் நாளை மின் தடை

கமுதி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

நகரில் மோசம் பிரிவில் காற்றின் தரம் அதிகபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி!

SCROLL FOR NEXT