புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூா் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.  
புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, பேராசிரியா் கணேஷ் குமாா் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

யுசிஜி நிா்ணயித்த ரூ. 57,700 என்ற ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு முன்னுரிமை: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக புதுகை விவசாயிகள் சங்கங்கள் கருத்து

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது

தமிழக இடைக்கால பட்ஜெட் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்-ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு

கல்வியே எதிா்காலத்துக்கு உதவும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

SCROLL FOR NEXT