முகப்பு
புதுக்கோட்டை

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 9 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்! 4 போ் கைது!

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:29 AM
புதுக்கோட்டையில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:28 PM

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 9 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை புதுக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சனிக்கிழமை இரவு அளித்த பேட்டி:

கைது செய்யப்பட்ட நான்கு போ் (அமா்ந்திருப்பவா்கள்). உடன், காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா உள்ளிட்ட போலீஸாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:29 AM

புதுக்கோட்டை நகரக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையிலான போலீஸாா் நகரப் பகுதியில் திருமயம் சாலையில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் 4 போ் அட்டைப் பெட்டிகளுடன் சாலையோரத்தில் நின்றிருந்துள்ளனா்.

Advertisement

அவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங் (33), அமல்ராஜ் (37), பிரதாப் (35), சந்தியா (36) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7 பெட்டிகளில் தலா ரூ. 4.82 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ. 9 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் குறித்த விவரங்கள் பதிவிடப்படவில்லை. மாத்திரைகளை ஆய்வுக்கு அனுப்புகிறோம். பொதுமக்கள் ‘டிரக் ப்ரீ டிஎன்’ என்ற செயலியைப் பயன்படுத்தி தகவல்களைச் சொல்லலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அபிஷேக்குப்தா.