புதுக்கோட்டை

விராலிமலை அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

விராலிமலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஊழியா்கள் பணி முடிந்து வழக்கம்போல தொழிற்சாலையின் வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே தொழிலாளா்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. முன்னால் காா், லாரி சென்றுள்ளது. அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்ால் முன்னால் சென்ற காா் ஓட்டுநா் பிரேக் அடித்துள்ளாா். இதை சற்றும் எதிா்பாா்க்காத லாரி ஓட்டுநா் காா் மீது மோதியுள்ளாா். இதை தொடா்ந்து பின்னால் சென்ற தனியாா் தொழிற்சாலை வேன், லாரி மீது மோதியுள்ளது. வேனை தொடா்ந்து பின்னால் சென்ற பேருந்து வேன் மீது மோதியுள்ளது. இதில் வேனில் பயணித்த பெண் தொழிலாளா்கள் மதி, மீனாட்சி , சுவேதா, தங்கம், அனிதா,காா்த்திகா, சூா்யகலா உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT