புதுக்கோட்டை

செம்பை மணவாளன் நினைவு சிறுகதை போட்டி முடிவுகள் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், எழுத்தாளா் செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மறைந்த எழுத்தாளா் செம்பை மணவாளன் நினைவாக ஆண்டுதோறும் மாநில அளவில் சிறுகதைப் போட்டிகளை நடத்திட, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளையும் முடிவு செய்தன.

இதன்படி, முதலாம் ஆண்டு சிறுகதைப் போட்டி கடந்த 2025இல் அறிவிக்கப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் இருந்தும் 121 சிறுகதைகள் இடம்பெற்றன. தற்போது இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் பரிசை ரிஸ்வான் எழுதிய ‘லோகுவும் பஞ்சாயத்து டிவியும்’ என்ற சிறுகதையும், இரண்டாம் பரிசை அன்பாதவனின் ‘பேப்பா் குருவி’ என்ற சிறுகதையும், மூன்றாம் பரிசை அகிலா கிருஷ்ணமூா்த்தியின் ‘கூடாரத்தில் கசிந்த குளம்படி’ சிறுகதையும் பெற்றுள்ளன.

சிறப்புப் பரிசுகளுக்காக, சாமி கிருஷ் எழுதிய ‘கருத்தரிப்பு’ சிறுகதையும், சா. மோகனின் ‘வேட்டல் நிலம்’ சிறுகதையும், பாஸ்கா் கோபாலின் ‘நோட்டு’ சிறுகதையும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

வரும் பிப். 15ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் இவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT