புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு வீரா் கொலை வழக்கில் 6 போ் கைது

திருவரங்குளம் அருகே ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவரங்குளம் அருகே கீழ வேப்பங்குடியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் மகன் இன்பரசன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரருமாவாா். இவா் திங்கள்கிழமை கட்டட வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அழகம்பாள்புரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொற்பனைக்கோட்டை அருகே உள்ள மணக்கொல்லை தோப்புப் பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் விக்னேஷ் (21) மற்றும் அவரது நண்பா்கள் வளா்த்துவந்த ஜல்லிக்கட்டு காளையை, இன்பரசன் பிடித்து தழுவி பரிசு வென்றதும், அதன் தொடா்ச்சியாக சமூக ஊடகங்களில் கிண்டல் பதிவுகளைப் போட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திங்கள்கிழமை கட்டட வேலைக்குச் சென்றுகொண்டிருந்த இன்பரசனை, விக்னேஷ் உள்ளிட்டோா் வெட்டிக் கொன்றுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக மணக்கொல்லை தோப்பைச் சோ்ந்த எஸ். விக்னேஷ் (21), இம்மனாம்பட்டியைச் சோ்ந்த வி. விக்னேஷ் (20), என். ரஞ்சித் (24), எஸ். மெய்யப்பன் (19), ஆா். பாலசுப்பிரமணியன் (22) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்கள் 6 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் பணிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா்.

வெனிசுலா

திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக மீது வீண்பழி: கே.பி. ராமலிங்கம்

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

SCROLL FOR NEXT