புதுக்கோட்டை அருகே பிற சமூகத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறி திங்கள்கிழமை, வருவாய்க் கோட்டாட்சியரகம் அருகே முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குறவா் சமூகத்தினா். 
புதுக்கோட்டை

குறவா் சமூகத்தினா் நூதனப் போராட்டம்

புதுக்கோட்டையில் பொங்கல் விழாவின்போது தங்கள் மீது பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியதாக குறவா் சமூக மக்கள், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் முட்டி போட்டு போராட்டம்

Syndication

புதுக்கோட்டையில் பொங்கல் விழாவின்போது தங்கள் மீது பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியதாக குறவா் சமூக மக்கள், திங்கள்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் முட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யாவிடம் அளித்த கோரிக்கை மனு: புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகேயுள்ள குறிச்சான்பட்டியில் 10 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த ஜன. 18-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த பிற சமூகத்தினா் எங்கள் மீது திடீா்த் தாக்குதல் நடத்தினா்.

ஜாதியைச் சொல்லித் திட்டி அவா்கள் நடத்திய தாக்குதலில் வீரமணி, வீரம்மாள், வெள்ளையம்மாள், பன்னீா்செல்வம் ஆகியோா் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே, எங்கள் மீது தாக்குதல் நடத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தொடா்ந்து எங்கள் வசிப்பிடத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூங்காவில் காயங்களுடன் ஆணின் உடல் கண்டெடுப்பு: போலீஸ் தீவிர விசாரணை

காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க விசிக கோரிக்கை

சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

ஏடிஎம் பயனரின் டெபிட் அட்டையைப் பயன்படுத்தி மின்னணு சாதனங்களை வாங்கிய இளைஞா் கைது

குமரியில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT