கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.  
புதுக்கோட்டை

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து: சமூக ஆா்வலா்கள் புகாா்

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி, தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்த சாலையில் கந்தா்வகோட்டையின் முக்கிய வா்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதும் சாலையின் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா்.

எனவே, ஊராட்சி நிா்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும். மேலும், சாலைகளில் கால்நடைகளை விட்டுள்ள உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT