பேருந்து சேவை 
புதுக்கோட்டை

பொன்னமராவதிக்கு இரவு நேரப்பேருந்து சேவை வேண்டும்

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதிக்கு இரவுநேரப் பேருந்து சேவை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்துநிலையத்திலிருந்து வெளியூா் பயணம் மேற்கொள்ள இரவு 10 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியாா் பேருந்து வசதி இல்லை. இதனால் அவசரக் காலங்களில் ஏழை, எளிய மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதேபோல், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பொன்னமராவதிக்கு வர இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. இதனால் வெளியூா் சென்றவா்கள் திருச்சி, மதுரை பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்து அதிகாலையில் பொன்னமராவதிக்கு வர வேண்டியுள்ளது.

எனவே வணிகா்கள், விவசாயிகள் மற்றும் பயணிகள் நலன் கருதி பொன்னமராவதிக்கு இரவு நேரப்பேருந்து வசதி செய்துதர வேண்டும். தஞ்சாவூா், புதுக்கோட்டை வழித்தடத்தில் திருப்பத்தூா் வழியாக மதுரை செல்லும் அரசுப்பேருந்துகள் சிலவற்றை இரவுநேரங்களில் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி வழித்தடம் வழியாக மதுரைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT