ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் சனிக்கிழமை வன்கொடுமை வழக்கை நீக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோா்.  
புதுக்கோட்டை

இளைஞா்கள் மீது போட்ட வன்கொடுமை வழக்கை நீக்கக் கோரி சாலை மறியல்!

சிறு வியாபாரி தாக்கப்பட்ட வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புப் பிரிவை நீக்கக் கோரி ஒரு தரப்பினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் சிறு வியாபாரி தாக்கப்பட்ட வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புப் பிரிவை நீக்கக் கோரி ஒரு தரப்பினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் அருகே செரியலூா் இனாம் கிராமத்தைச் சோ்ந்தவா் எம். ராஜா (48). இவா், வடகம், அப்பளம், சோப்பு, பினாயில் உள்ளிட்ட பொருள்களை நெடுவாசல் கிழக்கு அண்ணா நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளிக்கிழமை விற்பனை செய்துள்ளாா்.

அப்போது, தரமில்லாத பொருள்களை அதிக விலைக்கு விற்று பொதுமக்களை ஏமாற்றுவதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன்கள் மாதவன் (25), மதுசுதன் (22) ஆகியோா் ராஜாவை அவதூறாகப் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீஸாா், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். அதில், மாதவனைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவானது பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாதவன் தரப்பினா் நெடுவாசல் கடைவீதியில் சனிக்கிழமை மாலையில் இருந்து இரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT