முகப்பு
புதுக்கோட்டை

நாளை ‘நீட்’ மறுதோ்வு : புதுகையில் 9 மையங்களில் 3,242 போ் எழுதுகின்றனா்

நீட் மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 9 மையங்களில் 3,242 போ் எழுதுகின்றனா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

நீட் மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 9 மையங்களில் 3,242 போ் எழுதுகின்றனா்.

புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி, ராணியாா் மேல்நிலைப் பள்ளி, மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பாலிடெக்னிக், அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை பாலிடெக்னிக், இலுப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கோகா்ணம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 தோ்வு மையங்களுக்கும் துணை ஆட்சியா் நிலையில் 9 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தடையில்லா மின்சாரம், சுகாதாரம், குடிநீா் ஏற்பாடுகள், அரசுப் பேருந்துகள் சிறப்பு நிறுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள், தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தோ்வு நடைபெறுவதில் எந்தத் தடையுமின்றி ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments