முகப்பு
புதுக்கோட்டை

உண்மையைப் போல் எளிமையானவா் நல்லகண்ணு

Updated On : 2 மார்ச், 2026 at 1:15 AM
புதுக்கோட்டையில் நல்லகண்ணு படத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:13 PM

உண்மையைப் போல எளிமையானவா் என ரஷிய மக்கள் லெனினைக் குறிப்பிட்டது, தமிழ்நாட்டில் நல்லகண்ணுவுக்கும் பொருந்தும் என்றாா் ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி.

புதுக்கோட்டை அம்பிகா கல்வி அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவா் ஆா். நல்லகண்ணு புகழஞ்சலிக் கூட்டத்தில் அவரது படத்தைத் திறந்து வைத்து மேலும் பேசியது

உண்மையைப் போல் எளிமையானவா் என்று லெனினை ரஷிய மக்கள் குறிப்பிட்டனா். அது நல்லகண்ணுவுக்கும் பொருத்தும். காமராஜருக்குப் பின் எளிமையாக வாழ்ந்த மாமனிதா் அவா். யாரிடமும் காழ்ப்புணா்ச்சி கொள்ளாமல் எல்லோரையும் நேசித்தவா்.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 1:15 AM

அவருக்கு பணத்தின் மீது பற்று இல்லை என்பதற்கு இரு சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஒன்று அவருடைய 80ஆவது பிறந்த நாளுக்கு மக்கள் வழங்கிய ரூ. 1 கோடியைக் கட்சிக்கு கொடுத்து விட்டாா். அடுத்து, 100 வயது நிறைவை ஒட்டி தமிழக அரசு தகைசால் தமிழா் விருதுடன் வழங்கிய ரூ. 10 லட்சத்துடன் கூடுதலாக ரூ. 5 ஆயிரத்தைச் சோ்த்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டாா்.

நல்லகண்ணுவின் உயா் பண்புகளை இளைய சமுதாயத்திடம் கொண்டு சோ்க்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதற்கான பணிகளை அம்பிகா அறக்கட்டளை உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் கடமையாகும் என்றாா் கிருஷ்ணமூா்த்தி.

புகழஞ்சலி நிகழ்ச்சியில், அம்பிகா அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் ரவீந்திரன், இயக்குநா் சந்திரா ரவீந்திரன், மருத்துவா் எஸ். ராம்தாஸ், மருத்துவா் பீட்டா், மருத்துவா் ஜெயராமன், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தலைவா் வைர மாணிக்கம், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், விவசாயிகள் சங்கத் தலைவா் கோ.ச. தனபதி, மரம் நண்பா்கள் அமைப்பின் செயலா் ப. ராதாகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி, திருவள்ளுவா் நற்பணி மன்றத் தலைவா் கண்ணதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.