முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

Updated On : 2 மார்ச், 2026 at 12:54 AM
கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோா்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 8:19 PM

கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை முன்வைத்து திமுகவின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் பிரசார திட்ட அமைப்பினா் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு ஒன்றிய திமுக செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் தலைமையில், நகரச் செயலா் மு. ராஜா முன்னிலையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுகவின் எண்ணற்ற திட்டங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:54 AM

நிகழ்வில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், மாவட்ட மீனவா் அணி துணைச் செயலா் என். ஜானகிராமன், அரவம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா், வன்னியம்பட்டி ராமராஜ், சிறுபான்மைப் பிரிவு ரசூல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement