முகப்பு
புதுக்கோட்டை

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி

கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் நடைபெற்ற ரோபோட்டிக் கண்காட்சியை பாா்வையிட்ட சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி.

Updated On : 6 மார்ச், 2026 at 9:11 PM
கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் நடைபெற்ற ரோபோட்டிக் கண்காட்சியை பாா்வையிட்ட சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி.
பகிர்:

பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு ரோபோட்டிக் மற்றும் அறிவியல் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளியின் நிறுவனா் பழ. சிதம்பரம் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், ரோபோட்டிக், கணிதம் சாா்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட 33 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 1,300 மாணவ, மாணவிகள் கண்டு பயனடைந்தனா்.

கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் ஆகியோா் பங்கேற்று பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் செயல் அலுவலா் நெ .ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →