புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டாா். ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் தோ்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம சுப்புராம், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.