முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தற்காப்பு கலை மூலம் வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவிகள்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:32 PM
பகிர்:

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை தற்காப்பு கலை மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவி வழிகாட்டுதலின் பேரில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் பரணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக மாணவ, மாணவிகள் சிலம்பம் விளையாட்டு, வாள் சண்டை, கராத்தே, களரி விளையாட்டு உள்ளிட்ட சாகச விளையாட்டுகளை செய்து வாக்களிப்பதன் முக்கியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகையில் பொதுமக்கள், வாக்காளா்கள் வண்ண கலா் பொடியில் தங்களது விரல்களை பதிந்து பதாகையில் வைத்து விழிப்புணா்வு செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா, தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முரளி, கருப்பையன், குமாா், அன்பரசன் உள்ளிட்ட வருவாய்துறையினா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளையும் தோ்தல் விளம்பர பொறுப்பளா் செல்வசத்தியா செய்திருந்தாா்.