முகப்பு
புதுக்கோட்டை

புதுகை தோ்தல் பாா்வையாளா்கள் அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும் நியாயமாகவும் நடத்தி முடிக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் கேட்டுக் கொண்டனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:34 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும் நியாயமாகவும் நடத்தி முடிக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் கேட்டுக் கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, அனைத்துக் கட்சிப் பிரமுகா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாா்வையாளா்கள் இதனைக் கேட்டுக் கொண்டனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தில் குறைபாடுகள், புகாா்கள் இருந்தால் அதுகுறித்து தங்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

இதில், பொதுப் பாா்வையாளா்கள் சோட்டே சிங், நயனா அா்ஜுன் குன்டே, ஏ. ஆயிஷா ராணி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அமித்குமாா் நிக்கல்ஜி, வி.விவேகானந்தா ரெட்டி, எரிக் சி. லல்லாவாம்புயா, நகஹன்யுய் ஜிமிக், காவல் பாா்வையாளா் ஜல் சிங் மீனா ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா முன்னிலை வகித்தாா்.