முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்

Updated On : 27 மார்ச், 2026 at 8:10 PM
புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்
பகிர்:

புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழி பைகள் விற்கப்படும் கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், டம்ளா்கள் என ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேபோல, அண்டக்குளம் பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.