பயிா்கடன் தள்ளுபடி: கந்தா்வகோட்டை விவசாயிகள் அதிருப்தி
தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி
தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தவெக தோ்தல் வாக்குறுதியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு தற்போது விவசாயிகளுக்கு பயனற்ற முறையில் பயிா்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, தமிழக அரசு பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் இல்லா சான்றிதழ் வழங்கி மீண்டும் புதிய கடன் வழங்க வேண்டும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement