தஞ்சாவூர்

கழிவுநீர் கால்வாய் உடைப்பை சரிசெய்யாததைக் கண்டித்து சாலை மறியல்

DIN

தஞ்சாவூரில் கழிவுநீர் கால்வாய் உடைப்பை சரிசெய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் விளார் சாலை முனியாண்டிகோயில் தெரு அருகில் உள்ள பகுதியில் புதைவடிகால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 4 நாள்களாக சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பள்ளி, கோயில், வணிகவளாகங்களை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
மேலும், இக்கழிவுநீர் அருகே உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் கலந்து, மாரியம்மன் கோயில் அருகே உள்ள சமுத்திரம் ஏரியில் கலக்கிறது. இதனால் சமுத்திரம் ஏரி கழிவுநீர் ஏரியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 
இதனால் ஆத்திரமடைந்த விளார் சாலை, அண்ணா நகர், பூக்காரத்தெருப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் ராசு. முனியாண்டி தலைமையில் விளார் சாலையில் வியாழக்கிழமை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த இதர கட்சியினரும் பங்கேற்றனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புதைவடிகால் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த உடைப்பு வெல்டிங் மூலம் நாளைக்குள் சரிசெய்யப்படும் எனக் கூறினர். இதையேற்று அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT