தஞ்சாவூர்

கார் கண்ணாடி உடைப்பு வழக்கு: டிச. 14-க்கு  ஒத்திவைப்பு

DIN

கும்பகோணம்  அதிமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்ததாகக் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை டிச. 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணம் அதிமுக முன்னாள் நகரச் செயலர் பி.எஸ். சேகர் கார் கண்ணாடியைக் கல்வீசி உடைக்கப்பட்டதாக கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உள்பட 22 பேர் மீது கும்பகோணம் தாலுகா போலீஸார் 2011, ஜூலை மாதத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 
வழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 17 பேர் ஆஜராகினர். பின்னர், இந்த வழக்கை டிச. 14-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT