தஞ்சாவூர்

டிஎஸ்பி காதர்பாட்சா வழக்கு: சிலையை கடத்த பயன்படுத்திய கார்  நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

DIN

கோயில் சிலைகளை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி காதர்பாட்சா பயன்படுத்திய சொகுசு காரை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞானஅன்பு என்பவரிடமிருந்து 3 ஐம்பொன் சிலைகளை, சிலை 
கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய காதர்பாட்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியில் விற்றுவிட்டார்.
இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் 
பதிவு செய்து,  டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றிருந்த காதர்பாட்சாவை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஞானஅன்புவிடமிருந்து சிலையை எடுத்து வர காதர்பாட்சா சொகுசு காரை 
பயன்படுத்தியதும், அந்த காரை விற்பனை செய்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது நான்காவது உரிமையாளராக தூத்துக்குடியில் உள்ள ஒருவரிடம் இந்த கார் இருந்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அந்த காரை பறிமுதல் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில், நீதிபதி முன் ஒப்படைத்தனர்.
 இதையடுத்து விசாரணைக்கு தேவைப்படும்போது அதனை ஒப்படைக்க வேண்டும் எனவும் அதுவரை அந்த காரை தற்போது பயன்படுத்தி வருபவரே பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT