முகப்பு
தஞ்சாவூர்

அதிரை காதிர்  முகைதீன் கல்லூரியில்  மீலாது நபி விழா

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு எம்.கே.என். மதரஸா டிரஸ்ட், கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ.அபுல் ஹசன் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக பங்கேற்ற காயல்பட்டினம் மஹ்லரா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி எஸ். செய்யது அப்துர்ரஹ்மான் சிறப்புரையாற்றினார். 
 சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற வழக்குரைஞர், முன்னாள் வக்பு வாரியத் தலைவர் ஏ.ஜெ. அப்துல் ரெஜாக், எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜெ.முகமது அஸ்லம், நிர்வாகக்குழுத் தலைவர், ஊர் பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் வரவேற்றார். தமிழ்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →