தஞ்சாவூர்

குடந்தை சிவகுருநாதன் நூலக நிறுவனர் நூற்றாண்டு விழா

DIN

கும்பகோணத்தில் 63 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகுருநாதன் நூலகத்தின் நிறுவனர் சுவாமிநாதசெட்டியாரின் நூற்றாண்டு விழா நூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
சென்னை சாகித்ய அகாதெமியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் முனைவர் அ.சு. இளங்கோவன் தலைமை வகித்தார்.  சென்னை கன்னிமாரா மைய நூலக முன்னாள் இயக்குநர்  ந. ஆவுடையப்பன்  முன்னிலை வகித்தார்.
விழா மலரை திருப்பனந்தாள் காசிமட அதிபர் காசிவாசி முத்துகுமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் வெளியிட, பௌத்த ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், சித்த மருத்துவர் சங்கத் தலைவர் சி. கோவிந்தராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர். முருகன் ஆகியோர்  பெற்று கொண்டனர்.
சிட்டியூனியன் வங்கி திட்டக் குழுத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், சிட்டி யூனியன் வங்கி திட்டக்குழு இயக்குநர் பாலசுப்பிரமணியன், சுவாமிமலை சன்மார்க்க சங்கத் தலைவர் ராமநடராஜன், குடந்தை சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கோப்புநடராசசெட்டியார்,  செயலர் ராமகுருநாதன், பொருளாளர் மாறன், நெறிப்படுத்துநர் கோடிலிங்கம் ,  விழிகள் நடராஜன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
முனைவர் ராமகுருநாதன் வரவேற்க, நூலக இயக்குநர் சீ. தயாளன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT