தஞ்சாவூர்

காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

DIN

கல்லணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூர் அணையிலிருந்து செப். 12-ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் சனிக்கிழமை காலை வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றைக் கடக்க வேண்டாம். மேலும், காவிரியில் புனித நீராடும் பக்தர்களும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT