முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி தீவிபத்தில் இறந்தோர் நினைவாக தண்ணீர் பந்தல்

கோடைகாலத்தை முன்னிட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் கருப்பூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:51 am IST
பகிர்:

கோடைகாலத்தை முன்னிட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் கருப்பூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கும்பகோணம் பக்தபுரி தெருவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட  தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன. 
இந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் கோயில் சிவாச்சாரியார்களான ரவி, சிவகுமார் ஆகியோர் கும்பகோணத்தை அடுத்த கருப்பூரில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து, பொதுமக்களுக்கு சுமார் ஒரு மாத காலம் சேவை செய்வது வழக்கம். 
அதன்படி, செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் ரவி மற்றும் சிவக்குமார் சிவாச்சாரியார்கள் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.