தஞ்சாவூர்

ஆக. 15-இல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான இலவச பயிற்சி

DIN


தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம், கும்பகோணம் ரோட்டரி சங்கம், தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய ஒருநாள் இலவச பயிற்சி முகாம் கும்பகோணத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் உள்ள ரோட்டரி சங்க கட்டடத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தகவலறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், சட்டங்களைப் பயன்படுத்தி பயிர் காப்பீடு திடத்தின் கீழ் இழப்பீடு கிடைக்காத, பாதிக்கப்பட்ட, அரைகுறையாக இழப்பீடு பெற்ற, இழப்பீடு மறுக்கப்பட்டவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் சட்ட வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி, வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பயிற்சியளிக்க உள்ளனர். முகாமில் பங்கேற்க வரும் 13 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கும், முன்பதிவு செய்து கொள்ளவும் 95853 41091, 93453 42160 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT