தஞ்சாவூர்

பேராவூரணி அருகே வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,  குருவிக்கரம்பையில் தெருவில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று கடந்த மூன்று நாள்களாக சாலையில் சென்ற சுமார் 10 பேரை கடித்தது.
மேலும், வீட்டில் வளர்த்து வந்த பசுமாடு,  நாய்களையும் கடித்துக் காயப்படுத்தி உள்ளது. 
இதனால் அச்சமடைந்த இப்பகுதி மக்கள் அந்த வெறிநாயை அடித்துக் கொன்றனர்.
மேலும் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சம்பத், அலாவுதீன், நீலாவதி, மெய்யப்பன், சீனித்தேவர், பெரமையன் உள்ளிட்ட 10 பேருக்கு, சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பெருமகளூர், குருவிக்கரம்பை, ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக, ஏ.ஆர்.வி தடுப்பூசி போட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
வெறிநாயால் பாதிக்கப்பட்ட மற்ற பசு மற்றும்  நாய்களுக்கு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT