தஞ்சாவூர்

மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு

DIN

ஒரத்தநாட்டில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
ஒரத்தநாட்டை அடுத்த ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் பொதுமக்களின் ஒற்றுமைக்கு சில அரசியல் கட்சியினர் பங்கம் விளைவிப்பதை கண்டித்து, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஒரத்தநாடு பேருந்துநிலையம் அருகில் திரண்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு முத்துராமலிங்கதேவர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT