முகப்பு
தஞ்சாவூர்

ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவிகள் தூய்மைப் பணி

உலக அறிவியல் நாளையொட்டி,  தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி

தஞ்சாவூர்

ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவிகள் தூய்மைப் பணி

உலக அறிவியல் நாளையொட்டி,  தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

உலக அறிவியல் நாளையொட்டி,  தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இயற்கை பாதுகாப்பே அறிவியல் வளர்ச்சி என்ற மையக் கருத்தை நோக்கமாகக் கொண்டு தூய்மைப் பணி, விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்குத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செ. ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில், கல்லூரி மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர். மேலும், பூமித்தாயைக் காப்பதே அறிவியல் வளர்ச்சிக்கான வழி என்ற நோக்கில் மருத்துவமனைகளையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும் விதமான விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டறிக்கைகளைப் பழைய பேருந்து நிலையத்தில் மாணவிகள் வழங்கினர்.
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் விக்டோரியா, துணை முதல்வர்கள் ஏ.என். கிறிஸ்டி, எஸ். காயத்ரி, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் ஞானசெல்வம், நிலைய மருத்துவ அலுவலர் உஷா, தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர் எம்.எஸ். ஆசிப் அலி, சங்கத் தலைவர் ஏ. ஆல்பர்ட் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →