தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 1 வயது குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல்

DIN

கும்பகோணத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த பாவூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். விவசாயியான இவருக்கு ஸ்ரீதர்ஷன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்ரீதர்ஷனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து குழந்தை ஸ்ரீதர்ஷனை மருத்துவர்கள், கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே தனி அறையில் வைத்து, தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுதவிர,  மருத்துவனையில் 51 பேர் பல்வேறு விதமான காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 125 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT