தஞ்சாவூர்

சாலையில் கிடக்கும் மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட பாப்பாநாடு அருகேயுள்ள தெற்குக்கோட்டை கிராமத்தில் சாலையில் விழுந்த பெரு மரத்தை அகற்ற முடியாத நிலை உள்ளதால் 6 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள இக்கிராமம் பின்னையூர் - ஏனாதிக்குச் செல்வதற்கு முதன்மையான சாலையாக உள்ளது. எனவே, இச்சாலையில் நாள்தோறும் ஏராளமானோர் கடந்து செல்கின்றனர். 
இந்நிலையில், புயலால் அப்பகுதியில் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்தன. இவற்றை கிராம மக்கள் அகற்றினர். ஆனால், பெருமரத்தை அகற்ற முடியவில்லை. அரசுத் தரப்பில் இருந்து யாரும் வராததால் தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் இயக்கப்படும் சிற்றுந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

SCROLL FOR NEXT