ஏரி, குளங்களில் மழைநீரை சேமிக்க தமாகா வலியுறுத்தல்
ஏரி, குளங்களில் மழைநீரை சேமி க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏரி, குளங்களில் மழைநீரை சேமி க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஆர்.ரெங்கராஜன் அனுப்பிய மனு:
மாவட்டம் முழுவதிலும் தேவையான இடங்களில் தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
மழைநீரை ஏரி, குளங்களில் முறையாக சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாளுக்கு நாள் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தடுக்க, ஆதார விலையை உயர்த்தி தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.