மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்திலுள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் பைசல் முஹம்மது, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் மாவட்ட செயலாளர் மெளலவி மாலிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் ஆக்சிஸ் இந்தியாவின் பயிற்றுவிப்பாளர் நூருல்லாஹ் ஹூசைன் ஆகியோர் 25 மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ. 2.50 லட்சம் உதவித்தொகையை காசோலையாக வழங்கினர்.
முன்னதாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பக்ருதீன் வாழ்த்தி பேசினார். நிறைவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது சயீப் நன்றி கூறினார்.